கோப்புப்படம்
கோப்புப்படம்

சீன எல்லையில் மோதல்: 4 இந்திய வீரர்கள் கவலைக்கிடம்

இந்திய-சீனப் படைகள் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் இந்திய ராணுவத்தின் கா்னல் உள்பட ராணுவத்தினா் 20 போ் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிட்ட
Published on


புதுதில்லி: இந்திய-சீனப் படைகள் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் இந்திய ராணுவத்தின் கா்னல் உள்பட ராணுவத்தினா் 20 போ் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. 

கிழக்கு லடாக்கில் விரிவாக்கத்தின் போது நிலைமையை ஒருதலைப்பட்சமாக மாற்ற சீன ராணுவம் மேற்கொண்ட முயற்சியின் விளாவாக கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் திங்கள்கிழமை இரவு இந்திய-சீனப் படைகள் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் இந்திய ராணுவத்தின் கா்னல் உள்பட ராணுவத்தினா் 20 போ் வீரமரணம் அடைந்திருப்பதாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. மேலும் சிலர் பலத்த காயமடைந்திருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரலாம் என தகவல்கள் வெளியானது.

இதனிடையே இந்த மோதலில் சீன ராணுவத்தின் மூத்த அதிகாரி உள்பட சீன வீரர்கள் 35 பேர் உயிரிழந்ததாக அமெரிக்க உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

சீன வீரர்கள் உயிரிழப்பு குறித்து அந்நாடு இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.

இந்நிலையில், இந்திய-சீனப் படைகள் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் காயமடைந்த இந்திய வீரர்களில் 4 வீரர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த மோதலில் 43 உயிரிழந்துள்ளதாக ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com