பங்களா குடியிருப்பு வனச்சரக அலுவலகத்தில் கரடி பிடிப்பட்டது

பங்களா குடியிருப்பு வனச்சரக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கரடி பிடிப்பட்டது.
பங்களா குடியிருப்பு வனச்சரக அலுவலகத்தில் கரடி பிடிப்பட்டது
Published on
Updated on
1 min read


பங்களா குடியிருப்பு வனச்சரக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கரடி பிடிப்பட்டது. கடையம் வனச்சரகப் பகுதியில் கடந்த 10 நாள்களில் 4 கரடிகள் பிடிப்பட்டுள்ளது கடையம் வனச்சரக பகுதியில் உள்ள கிராம மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம் கடையம் வனச்சரகத்திற்குள்பட்ட வனப்பகுதியில் இருந்து, காட்டுப்பன்றி, கரடி, மிளா, யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் மலையடிவரத்திலுள்ள கிராம பகுதிகளுக்குள் நுழைந்து அட்டகாசம் செய்து வருகின்றன. குறிப்பாக பங்களா குடியிருப்பு, சிவசைலம், அழகாபுரம், கருத்தப்பிள்ளையூர், ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வனப்பகுதியில் இருந்து வெளிவரும் கரடிகள் மா, பலா, தென்னை உள்ளிட்டவற்றை  நாசப்படுத்தி வந்தன. 

இதுகுறித்து வந்தப் புகாரையடுத்து அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநர் கொம்மு ஓம்காரம் உத்தரவின் பேரில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வன விலங்குகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வந்தன. 

இதையடுத்து விலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் அவற்றைப் பிடிக்க கூண்டுகள் வைக்கப்பட்டன. இதில் ஏப்ரல் 29, மே 31 மற்றும் ஜூன் 12 ஆகிய நாள்களில் மூன்று கரடிகள் பிடிபட்டன. ஜூன் 16 ஆம் தேதி காலையும், இரவும் இரண்டு கரடிகள் பிடிபட்டன. 

இந்நிலையில் தொடர்ந்தும் கரடி நடமாட்டம் இருந்ததால் பங்களா குடியிருப்பில் உள்ள வனச்சரக அலுவலகத்தில் கூண்டு வைக்கப்பட்டது. இதில் ஞாயிறுக்கிழமை அதிகாலை (ஜூன் 21) கரடி ஒன்று பிடிப்பட்டது. கூண்டில் பிடிபட்ட கரடியை துணை இயக்குநர் கொம்மு ஓங்காரம் தலைமையில் வனச்சரகர் நெல்லைநாயகம், வனவர் முருகசாமி உள்ளிட்டோர் முண்டந்துறை வனப்பகுதியில் கொண்டு விடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். 

ஜூன் 12 முதல் ஜூன் 21 வரையிலான பத்து நாள்களில் 4 கரடிகள் பிடிபட்டுள்ளது கடையம் வனச்சரக பகுதியில் உள்ள கிராம மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com