யோகாவுக்கு ஜாதி மதம் பேதமில்லை: பிரதமர் மோடி பேச்சு

உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் யோகாவுக்கு ஜாதி, மதம், இனம், மொழி, நாடு, பாலினம் என எந்த பேதமும் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். 
யோகாவுக்கு ஜாதி மதம் பேதமில்லை: பிரதமர் மோடி பேச்சு


புதுதில்லி: உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் யோகாவுக்கு ஜாதி, மதம், இனம், மொழி, நாடு, பாலினம் என எந்த பேதமும் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். 

சா்வதேச யோகா தினம் 2015-ஆம் ஆண்டு ஜூன் 21-ஆம் தேதி முதல் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு யோகா தினத்தின் கருப்பொருளான, ‘வீட்டிலிருந்தபடியே குடும்பத்துடன் யோகா’ என்பதன் அடிப்படையில் 21-ஆம் தேதி காலை 7 மணி முதல் மக்கள் இந்த நிகழ்வில் இணைய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை காலை நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், "6-வது சர்வதேச யோகா தினத்தில் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த நாள் ஒற்றுமை மற்றும் உலகளாவிய சகோதரத்துவத்தின் நாள்" என்று பிரதமர் மோடி கூறினார்.

யோகா ஆரோக்கியத்திற்கான தேடலை மேம்படுத்துகிறது, மேலும் இது பாகுபாடு காட்டாது, இது  ஜாதி, மதம், இனம், மொழி,  நாடு, பாலினம், நம்பிக்கை மற்றும் வம்சாவளி என எந்த பேதமும் இல்லாமல் தாண்டி செல்கிறது. 

இது ஒற்றுமைக்கான சக்தியாக உருவெடுத்து மனிதகுலத்தின் பிணைப்புகளை ஆழமாக்குகிறது. சர்வதேச அளவில் ஒற்றுமையை பறைசாற்றும் நாளாக அமைந்துள்ளது. உலக நாடுகள் ஒன்றுபட வேண்டிய தினம். யோகாவின் பயன்களை முன் எப்போதும் இல்லாத அள்விற்கு நாடு உணர்ந்துள்ளது. உங்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக யோகா பழகுங்கள். கரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருந்து யோகா செய்யுங்கள். கரோனாவை வீழ்த்த யோக சிறந்த வழிமுறையாக திகழ்கிறது. கரோனாவில் இருந்து மீண்டு வர யோகா செய்யுங்கள். யோகா உடல் வலிமையுடன் மன வலிமையையும் தருகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. குடும்ப வன்முறையை ஒழிக்கும். சுய ஒழுக்கம் மற்றும் தன்னம்பிக்கையை வளர்க்கும். நமக்குத் தேவை யோகா செய்வதற்கான நேரமும் சிறிதளவு இடமும் மட்டுமே. பகவத் கீதையில் கூட கிருஷ்ணர் யோகவை பற்றி கூறியுள்ளார் என்று கூறினார். 

செப்டம்பர் 27, 2014 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் பிரதமர் மோடி தனது உரையில் சர்வதேச யோகா தினத்தை முன்மொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com