கரோனா நிவாரணத் தொகை வழங்க வலியுறுத்தி கிராமிய கலைஞர்கள் சார்பில் கலைநிகழ்ச்சி

சிவகாசி வட்டார கிராமிய கலைஞர்கள் சங்கம் சார்பில் கிராமியக் கலைஞர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதியாக தமிழக அரசு மாதம் ரூபாய் 5000 வழங்க வலியுறுத்தி திங்கட்கிழமை கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
கரோனா நிவாரணத் தொகை வழங்க வலியுறுத்தி கிராமிய கலைஞர்கள் சார்பில் கலைநிகழ்ச்சி

சிவகாசி வட்டார கிராமிய கலைஞர்கள் சங்கம் சார்பில் கிராமியக் கலைஞர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதியாக தமிழக அரசு மாதம் ரூபாய் 5000 வழங்க வலியுறுத்தி திங்கட்கிழமை கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. 

இது குறித்து அதன் ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் கூறியதாவது; கடந்த ஆறு மாத காலமாக கிராமியக் கலைஞர்கள் வேலையின்றி உள்ளார்கள். பங்குனி சித்திரை வைகாசி ஆகிய மாதங்களில் கோயில்களில் விழா நடைபெறும். அந்த விழாக்களில் கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். இதன்மூலம் ஆண்டு முழுவதும் கிராமியக் கலைஞர்கள் வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். 

இவர்களுக்கு வேற எந்த வேலையும் தெரியாததால் முழுக்க முழுக்க கோயில் விழாக்களில் நம்பி உள்ளனர். இந் நிலையில் பொது முடக்கத்தான் இவர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். வரும் சுமார் ஆறு மாத காலத்திற்கு சொல்லக்கூடிய வகையில் இவர்களுக்கு வருமானம் வருமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே ஒவ்வொரு கிராமியக் கலைஞர்களின் குடும்பத்திற்கும் தலா ரூபாய் 5000 கரோனா நிவாரணத் தொகையாக அரசு 4 வாரங்களுக்குள் வழங்க வேண்டும்.

மேலும் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களும் வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை நாங்கள் கலைநிகழ்ச்சி நடத்தி அரசுக்கு தெரிவிக்கிறோம் என்றார். சிவகாசி அருகே கல்லமநாயக்கன்பட்டி யில் உள்ள ஒரு கோயிலின் முன்பு நையாண்டி மேளம் கரகாட்டம் தப்பாட்டம் குறவன் குறத்தி ஆட்டம் ராஜா ராணி உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் திங்கட்கிழமை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com