

புதுதில்லி: 45 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அவசர நிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
அமித்ஷா டுவிட்டர் பக்கத்தில் பதிவில் கூறியிருப்பதாவது: இந்நாளில், 45 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குடும்பத்தின் அதிகார பதவி ஆசைக்காக அவசர நிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். ஒரே இரவில் தேசம் சிறைச்சாலையாக மாற்றப்பட்டது. பத்திரிகைகள், நீதிமன்றங்கள், சுதந்திரமான பேச்சு அனைத்தும் மிதிக்கப்பட்டன. ஏழைகள் மற்றும் நலிந்தவர்கள் மீது அட்டூழியங்கள் அரங்கேறியது என்று அமித்ஷா பதிவிட்டுள்ளார்.
1975 -ஆம் ஆண்டு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதன் 45 வது ஆண்டையொட்டி அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.