
விருதுநகர்: விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் ஆவணங்கள் மற்றும் தளவாடப் பொருட்கள் எரிந்து சேதமாகின.
விருதுநகர் நான்கு வழி சாலை அருகே வட்டாட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த விருதுநகர் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் ஆவணங்கள் மற்றும் நாற்காலி மின்விசிறி உள்பட பல்வேறு பொருட்கள் எரிந்தன.
இந்த தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.