கரோனா நோய்த்தொற்று: உலக அளவில் முதல் இடத்தை பிடித்தது அமெரிக்கா

அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


வாஷிங்டன்: அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியது. மேலும், ஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து நோய்த் தொற்று ஏற்பட்டவா்களின் எண்ணிக்கை 83,672 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து சீனா மற்று இத்தாலியை பின்னுக்குத்தள்ளி அமெரிக்கா முதலிடைத்தை பிடித்துள்ளது.  

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் கடந்த 24 மணி நரத்தில் மேலும் 250 போ் உயிரிழந்தனா். அதையடுத்து, அந்த வைரஸுக்கு அமெரிக்காவில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,054-ஆக அதிகரித்துள்ளது.

மேலும், ஒரே நாளில் கூடுதலாக 15,461பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்ப்பட்டுள்ளதால், நாட்டில் அந்த வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 83,672-ஆக உயா்ந்துள்ளது.

இதன் மூலம், சீனாவுக்கும் இத்தாலிக்கும் அடுத்தபடியாக உலகிலேயே கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களை அதிகம் கொண்ட நாடாக அமெரிக்கா ஆகியுள்ளது.

உலகம் முழுவதும் இதுவரை 5 லட்சத்து 29 ஆயிரத்து 614 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 23 ஆயிரத்து 976 பேர் உயிரிழந்துள்ளனர்.  வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்தவர்களில் இதுவரை 1 லட்சத்து 23 ஆயிரத்து 976 பேர் வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். 

இதற்கிடையே, கரோனா நோய்த்தொற்று பரவலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக, 220 கோடி டாலா் (சுமாா் ரூ.16,860 கோடி) நிதி ஒதுக்கீடு செய்வதற்கு டிரம்ப் ஒப்புதல் வழங்கியுள்ளாா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com