
சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் சென்றுவரும் இருசக்கர வாகன ஓட்டிகளை தடுத்து நடவடிக்கை எடுப்பதில் காட்டும் ஆர்வத்தை காவல்துறையினர், இறைச்சிக் கடைகள், காய்கறி கடைகள், மளிகை கடைகள் முன் கூடும் கூட்டத்தை கட்டுப்படுத்த தவறி வருகின்றனர். மேலும் சமூக விலகல் கடைபிடிக்கவில்லை. நகராட்சி காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கப்படுமா?
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதில் 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டதும் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியில் அவ்வப்போது வந்து சென்றனர். ஆனால் சாத்தூர் பகுதியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் நகராட்சி மற்றும் காவல்துறையினர் சார்பில் கிருமிநாசினி தெளிப்பு ,தெருக்கள் மற்றும் வீடுகளின் முன்பு கிருமி நாசினி மருந்துகள் தெளித்தல் உள்ளிட்ட எந்தவித தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் மெத்தன போக்கை மட்டுமே கடைப்பிடித்து வருகின்றனர்.
பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என்று ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுப்பதில் மட்டுமே குறியாக உள்ளனர்.கொளுத்தும் வெயிலில் வாகன ஓட்டிகளை விரட்டிவிரய்டி அடிக்கும் நிலையை பொதுமக்கள் கூடும் இடத்திற்கு அவர்களை சமூக இடைவெளி ஏற்படுத்தும் நிலைக்கு கட்டாயப்படுத்தினாலே நோய் பரவும் அபாயத்தை கட்டுப்படுத்தமுடியுள் என் சமூக ஆர்வலர்கள் கருத்துதெரிவித்துவருகின்றனர்.
குறிப்பாக நேற்றைய தினம் ஞாயிற்றுகிழமை நாளன்று வழக்கத்திற்கு மாறாக அசைவபிரியர்கள் அதிகமான அளவில் நகர் பகுதியில் சென்று வந்தனர். சாத்தூர் பகுதியில் தற்காலிகமாக பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் சந்தை, ஆட்டு இறைச்சி கடை,கோழிகறிக்கடை ,மீன்கடைகள் எனவும் , பைபாஸ் ரோடு அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஆனால் இந்த இடங்களில் பொதுமக்கள் யாரும் சமூக விலகலை கடைப்பிடிக்கப்படவில்லை, அப்பகுதிகளில் இடைவெளி விட்டு மக்கள் நிற்பதற்கான கட்டங்கள் அமைக்கப்படாமல் கும்பல் கும்பலாக நின்று வாங்கிய நிலைதான் காணப்பட்டது. இதனை நகராட்சி அதிகாரிகளோ காவல்துறையினரோ கண்டுகொள்ளவில்லை, நோய் பரவும் மக்கள் நெருக்கமான இடங்களில் அவர்களின் கவனத்தை செலுத்தாமல், அவர்களது முழுகவனமும் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது மட்டுமே செலுத்தப்பட்டது வேதனை அளிப்பதாக இருந்தது. பொருட்கள் வாங்க பெரும்பாலோனோர் முடக்கவும் கூட அணியவில்லை அதற்கான எச்சரிக்கை தெரிவிக்கக்கூட ஆளில்லை , நகர் பகுதியில் நகராட்சி அதிகாரிகள் காவல்துறையினர் குறைந்த அளவே ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், மாவட்ட நுழைவு பகுதியில் ஓரிரு காவலர்கள் இருந்தால் போதுமானது.
ஆனால் அப்பகுதியில் ஏராளமான போலீஸார் பணியமர்த்தப்பட்டுள்ளனர், அங்கு காவலர்கள் எண்ணிக்கையை குறைத்து நகர்புற பகுதி மற்றும் இது போன்ற மக்கள் கூடும் இடங்களில் பணியமர்த்தப்பட்டால் மட்டுமே சமூக இடைவெளியை ஏற்படுத்தி நோய்பரவலை தடுக்கமுடியும் என் கருத்து தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அலட்சியமாக இருப்பது நோய் பரவுதல் அதிகமாக காணப்படும் எனவே நகராட்சி மற்றும் காவல்துறையினர் அதிக கவனம் செலுத்தி இதுபோன்ற செயல்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.