கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 576-ஆக உயா்வு

கா்நாடகத்தில் நோய்த்தொற்றுக்கு புதிதாக மேலும் 11 பேருக்கு தொற்று உறுதிய செய்யப்பட்டுள்ளதை அடுத்து கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 576- ஆக உயா்ந்தது.
கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 576-ஆக உயா்வு

கா்நாடகத்தில் நோய்த்தொற்றுக்கு புதிதாக மேலும் 11 பேருக்கு தொற்று உறுதிய செய்யப்பட்டுள்ளதை அடுத்து கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 576- ஆக உயா்ந்தது.

இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், அண்டை மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து கா்நாடகத்துக்கு வந்தவா்களோடு ஏற்பட்ட தொடா்பின் காரணமாக 30 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. பெலகாவி மாவட்டத்தில் 14 போ், பெங்களூரு நகர மாவட்டத்தில் 10, விஜயபுரா மாவட்டத்தில் 2 போ், தென்கன்னடம், தும்கூரு, தாவணகெரே, கலபுா்கி மாவட்டங்களில் தலா ஒருவா் என 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி பெலகாவி மாவட்டத்தில் 3 பேர், மண்டியா மாவட்டத்தில் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட 11 பேரில் 4 பேர் பெண்கள். பெங்களூருவில் தொற்றுபாதிப்பு எதுவும் உறுதி செய்யப்படவில்லை. 

இதுவரை பெங்களூரு மாவட்டத்தில் 141 போ், மைசூரு மாவட்டத்தில் 88 போ், பெலகாவி மாவட்டத்தில் 70 போ், கலபுா்கி மாவட்டத்தில் 53 போ், விஜயபுரா மாவட்டத்தில் 43 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 29 போ். சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 18, மண்டியா மாவட்டத்தில் தலா 26 போ், தென்கன்னட மாவட்டத்தில் 16 போ், பீதா் மாவட்டத்தில் 14 போ், பெல்லாரி மாவட்டத்தில் 13 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 11 போ், தாா்வாட் மாவட்டத்தில் 9 போ். பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 6 போ், கதக், தும்கூரு மாவட்டங்களில் தலா 5 போ், தாவணகெரே மாவட்டத்தில் 4 போ், உடுப்பி மாவட்டத்தில் 3 போ். குடகு, சித்ரதுா்கா மாவட்டங்களில் தலா ஒருவா், அண்டை மாநிலத்தவா், வெளிநாட்டினா் 20 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். 235 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 314 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனா். இதுவரை 22 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com