

பாரிஸ்: பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பால் 218 பேர் உயிரிழந்துள்ளனர், மார்ச் மாத இறுதியில் இருந்த இறப்புகளை விட மிகக் குறைவான அதிகரிப்பு என்று பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்றுக்கு உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34,13,169 உயர்ந்துள்ள நிலையில், பலியானோரின் எண்ணிக்கை 2,39,711-ஐ தாண்டியுள்ளது.
அமெரிக்காவில் தொற்று பாதிப்பால் 66,776 பேர் பலியாகியுள்ளனர், 11,31,492 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,61,563 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இத்தாலியில் 2,07,428 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 28,236 பேர் பலியாகியுள்ளனர், 78,249 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஸ்பெயினில் 2,42,988 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 24,824 பேர் தொற்று பாதிப்பால் பலியாகியுள்ளனர், 1,42,450 பேர் குணமடைந்துள்ளனர். பிரிட்டனில் 1,77,454 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 27,510 பேர் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில், பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் 218 பேர் பலியாகியுள்ளனர், இதையடுத்து பலி எண்ணிக்கை 24,592 -ஆக அதிகரித்துள்ளது, மார்ச் மாத இறுதியில் இருந்த இறப்புகளை விட மிகக் குறைவான அதிகரிப்பு தான் என்றும், இதுவரை தொற்றால் 1,67,346 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 50,212 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது என்று பிரான்ஸ் சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மார்ச் 17 ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்திய பிரான்ஸ், படிப்படியாக ஊரடங்கு கட்டுப்பாட்டை தளர்த்த திட்டமிட்டுள்ளது. விரைவில் ஊரடங்கு முடிந்தது என்று செய்தியை எதிர்பார்க்கலாம் என தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.