

உலக அளவில் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 41, 01,974 ஆக உயர்ந்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த கொடிய நோய்த்தொற்றுக்கு இதுவரை தடுப்பு மருந்தோ தடுப்பு ஊசியோ கண்டுபிடிக்காத நிலையில், தொற்றின் பாதிப்பும் பலியும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இந்நிலையில், உலக அளவில் தொற்றுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 41,01,974 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 14,41,866 ஆக அதிகரித்துள்ளது, தொற்று பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை 2,80,451 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருபவர்களில் 47,685-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.