ஒவ்வொரு வகுப்புக்கும் ஒவ்வொரு டிவி சேனல்: நிதியமைச்சர் அறிவிப்பு

நிலம், தொழிலாளர் நலன், பணப்புழக்கம் தொடர்பான அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை அறிவித்து பேசி வருகிறார்.
ஒவ்வொரு வகுப்புக்கும் ஒவ்வொரு டிவி சேனல்: நிதியமைச்சர் அறிவிப்பு

நிலம், தொழிலாளர் நலன், பணப்புழக்கம் தொடர்பான அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை அறிவித்து பேசி வருகிறார். அப்போது தற்போதைய சவால்கள் மேலும் வலிமை மிக்க இந்தியாவை உருவாக்கும் என்று நிர்மலா சீதாராமன் கூறினார். 

கரோனா நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதை மீட்டெடுக்கும் வகையில் ரூ. 20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்புப் பொருளாதாரத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி அறிவித்தாா்.

இதையடுத்து, ‘தற்சார்பு இந்தியா’ என்ற பெயரிலான அந்தத் திட்டங்கள் தொடா்பான அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறாா். அந்த வகையில் 5-ஆவது நாளாக நிலம், தொழிலாளர் நலன், பணப்புழக்கம் தொடர்பான புதிய அறிவிப்புகளை வெளியிட்டு செய்தியாளா்களிடையே ஞாயிற்றுக்கிழமை அவா் பேசி வருகிறார். 

8.11 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.16,294 கோடி செலுத்தப்பட்டுள்ளது. ஜந்தன் கணக்கு மூலம் மக்களுக்கு நேரடியாக பண உதவி கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜன்தன் வங்கிக் கணக்கு வைத்துள்ள 20 கோடி பெண்களின் வங்கிக் கணக்கின் மூலம் ரூ.10,025 கோடி மத்திய அரசு வழங்கியுள்ளது. குடும்ப அட்டைகளுக்கு உணவு தானியம் மற்றும் பருப்பு வழங்கப்பட்டுள்ளது என்று கூறிய நிர்மலா சீதாராமன், மாநில அரசுகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். 

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்கு செல்லும் ரயில் கட்டணத்தில் 85 சதவீதத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. ரயில் பயணத்தின்போது வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு உணவு வங்கப்பட்டுள்ளது.  12 லட்சம் பேர் இபிஎப்ஒ மூலம் பணத்தை எடுத்துள்ளனர். 

100 நாள் வேலைத்திட்டம், மருத்துவம் மற்றும் கல்வி, பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டு பேசி வருகிறார்.  

* கரோனா தொற்று பரிசோதனைகளுக்கான ரூ.550 கோடி கொடுத்துள்ளது. சுகாதாரத்துறைக்கு பிரதமர் ஏற்கெனவே ரூ.15,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். ஒட்டுமொத்தமாக கடந்த இரண்டு மாதங்களில் ரூ.15 ஆயிரம் கோடி  சுகாதாரத்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

* மாநிலங்களின் சுகாதாரத்துறை திட்டங்களுக்கு ரூ.4,113 கோடி கொடுத்துள்ளது மத்திய அரசு.

* 11.08 கோடி ஹைட்ரோகுளோரோகுயின் மாத்திரைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

* அத்தியவாசிய மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக ரூ.3,750 கோடி வழங்கப்பட்டுள்ளது.

* பொது சுகாதார ஆய்கங்கள் வட்ட அளவில் அமைக்கப்படும். தொற்று நோய் தடுப்பு மையங்கள் மாவட்ட அளவில் அமைக்கப்படும். 

* அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் தொற்றுநோய் தடுப்பு பிரிவுகள் உருவாக்கப்படும்.

* மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உடைகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன.

கல்விக்கு தனி தொலைக்காட்சி:


* பள்ளிக் கல்விக்காக ஏற்கெனவே 3 தொலைக்காட்சி அலைவரிசைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் ஆன்லைன் வழி கல்விக்காக 12 புதிய கல்வித் தொலைக்காட்சி அலைவரிசைகள் உருவாக்கப்பட உள்ளன. 

* பள்ளிகள் திறக்கப்பட முடியாத சூழலில் ஆன்லைன் கல்விக்கு அனைத்து விதமான ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளன. 

* ஆன்லைன் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் இ-வித்யா என்ற புதிய திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

* பொது ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் வழி கல்வி வழங்க ஊக்குவிக்கப்படுகிறது.  

* 1 முதல் 12ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு தொலைக்காட்சி அலைவரிசை.

*  மாற்றுத் திறனாளிகளுக்கான மின்-பாடங்கள் உருவாக்கப்படும்.

* இ-பாடசசாலை திட்டத்தின் கீழ் 200 பாடப் புத்தகங்கள் சேர்க்கப்படுகிறது. 

* புதிய கல்வி தொலைக்காட்சி அலைவரிசைகளுக்காக தனியார் டி.டி.எச் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.  

* தொடக்கக் கல்வியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான புதிய திறன் மேம்பாடு வரைவு திட்டங்கள் வகுக்கப்படும்.

* கல்வி தொலைக்காட்சி நாளொன்றுக்கு 4 மணி நேரம் ஒளிபரப்பப்படும். 

* ஆசிரியர்கள் மாணவர்கள் இடையேயான உரையாடல் கல்வித் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்படும். 

* ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு டிவி சேனல் தொடங்கப்படும். 

* பல்கலைக்கழங்களில் ஆன்லைன் கோர்ஸ் அறிமுகம் செய்ய அனுமதிக்கப்படும் என்றார்.

* மனோதர்பன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

100 நாள் வேலை திட்டத்திற்கு கூடுதல் நிதி

*100 நாள் வேலை திட்டத்திற்ககாக ரூ.61,000 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், இப்போது கூடுதலாக 40,000 கோடி கூடுதல் நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது. 

* அதிக உற்பத்தி மூலம் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com