இந்தியாவில் தொற்று பாதித்தோரின் 1,12,359 ஆக உயர்வு ; பலி 3,435

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,609 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் தொற்று பாதித்தோரின் 1,12,359 ஆக உயர்வு ; பலி 3,435
Updated on
1 min read


புதுதில்லி: இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,609 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,12,359 -ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவல்படி, வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில் 132 உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன. இதன்மூலம் தொற்று பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,435 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் இதுவரை இல்லாத அளவில் புதிதாக 5,609 பேருக்கு தாற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,12,359 -ஆக அதிகரித்துள்ளது 

மொத்தம் பாதிக்கப்பட்டோரில் 63,624 போ் சிகிச்சையில் உள்ளனா். 45,300 போ் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். புதன்கிழமை ஒரே நாளில் 3,002 பேர் குணமடைந்துள்ளனர். 

நாட்டில் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 39,297 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,390 பேர் பலியாகியுள்ளனர். அடுத்தப்படியாக குஜராத்தில் 12,537 பேர் தமிழகத்தில் 13,191 பேர், தேசிய தலைநகர் தில்லியில் 11,088 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய ஊரடங்கு மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com