உத்தமபாளையம்: ஞானாம்பிகை கோவில் உண்டியலை உடைத்து திருட்டு 

உத்தமபாளையம் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் ஞானாம்பிகை கோவிலில் வியாழக்கிழமை இரவு மர்ம நபர்களால் கோவில் உண்டியல் உடைத்து திருட்டு குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
திருடுபோன உத்தமபாளையம் ஞானாம்பிகை கோவில் முன் பகுதி.

உத்தமபாளையத்தில் பழமை வாய்ந்த திருக்காளத்திஸ்வரர் ஞானாம்பிகை கோவில் அமைந்துள்ளது. தென் காளகஸ்தி என்று அழைக்கப்படும் இக்கோவிலில் மாசி திருவிழா, தேரோட்டம் என பல்வேறு விழாக்கள் வெகு விமர்சையாக நடைபெறும். நாள்தோறும் ஐந்து கால பூஜை  நடைபெறும். தினமும் 25 நபர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படும். 

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை பூஜைக்காக கோவில் திறக்கப்பட்டது. அப்போது கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த அன்னதான உண்டியல் உள்பட இரு உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து கோவில் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து உத்தமபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவலர்கள் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்களை ஆராய்ந்து வருகின்றனர்.

இதற்கு சில மாதங்களுக்கு முன்னதாக கோவில் உண்டியல் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com