

உள்நாட்டு விமானங்களில் நவம்பர் 8ஆம் தேதி ஒரே நாளில் 2.06 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஹரிதீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹர்தீப் தெரிவித்ததாவது,
“கரோனா பேரிடருக்கு பின், உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கிய மே 25ஆம் தேதி 30 ஆயிரம் பயணிகள் பயணித்தார்கள். தற்போது நவம்பர் 8ஆம் தேதி அதிகபட்சமாக 2.06 லட்சம் பேரை எட்டியுள்ளது.
உள்நாட்டு விமானங்கள் தற்போது 60இல் இருந்து 70 சதவீதமாக இயக்கப்பட உள்ளது.” என தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.