
ரியாதில் இருந்து தில்லி வந்த கோ ஏர் விமானம் கராச்சியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு அவசரமாக தரையிறக்கப்பட்டது.
செளதியின் தலைநகரம் ரியாதில் இருந்து தில்லிக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் கோ ஆர் ஜி 8- 6658 ஏ விமானம் 179 பயணிகளுடம் புறப்பட்டது.
இந்த விமானத்தில் பயணித்த 30 வயதுடைய பயணி ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் கராச்சியில் உள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இதன்பின், விமானம் புறப்பட்டு தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.