கால்பந்தின் பிதாமகன் மரடோனா மறைவு
பிரபல கால்பந்து வீரர் மரடோனா(60) மாரடைப்பால் புதன்கிழமை காலமானார்.
கால்பந்து ஜாம்பவானான மரடோனாவிற்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், வீட்டில் சிகிச்சையில் இருந்த மரடோனாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டு புதன்கிழமை உயிரிழந்தார். இச்செய்தியை அவரது வழக்கறிஞர் உறுதி செய்துள்ளார்.
உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் மரடோனா, நான்கு உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடியுள்ளார். 1986-ல் மரடோனா தலைமையிலான ஆர்ஜெண்டீனா அணி உலகக்கோப்பையை வென்றது. அப்போட்டியின் சிறந்த வீரராகவும் தேர்வானார். ஆர்ஜெண்டீனா அணிக்காக 91 ஆட்டங்களில் விளையாடி 34 கோல்களை அடித்துள்ளார்.
இவரது மறைவு கால்பந்து ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.