
கண்டலேறு அணையில் இருந்து சென்னை குடிநீருக்காக திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நதிநீர் 15 நாள்களிலேயே ஒரு டி.எம்.சி அளவு தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.
சென்னை குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் கிருஷ்ணா நதிநீர் திறக்கப்பட்டு வருகிறது.
கண்டலேறு அணையில் நீர்திறப்பு 2200 கன அடியாக உள்ளது. கடந்த 20ஆம் தேதி கிருஷ்ணா நதிநீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட் வந்தடைந்த நிலையில் பூண்டி நீர் தேக்கத்தில் தேக்கி வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நீரானது சென்னை குடிநீர் தேவைக்காக புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு பின்னர் அனுப்பி வைக்கப்படும். 15 நாள்களிலேயே தமிழக எல்லைக்கு 1 டி.எம்.சி கிருஷ்ணா நதிநீர் கிடைத்துள்ளது.
தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டிற்கு 764 கனஅடி கிருஷ்ணா நதிநீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த தவணை காலத்தில் தமிழகத்திற்கு 4 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்படும் என ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.