வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் தொடர் போராட்டம்

பஞ்சாபில் விவசாய சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்று வருவதால் மின் நெருக்கடியை சந்திக்கும் அச்சம் எழுந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று சாலை மறியலில் ஈடுபட்ட பஞ்சாப் மக்கள்
இன்று சாலை மறியலில் ஈடுபட்ட பஞ்சாப் மக்கள்

பஞ்சாபில் விவசாய சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்று வருவதால் மின் நெருக்கடியை சந்திக்கும் அச்சம் எழுந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாநிலம் முழுவதும் கடந்த 15 நாள்களுக்கு மேலாக ரயில் மறியல் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 2 மாவட்டங்களில் 70 முக்கிய சாலைகளை மறித்து போராட்டம் நடைபெற்று வருகின்றது.

இதன்மூலம் நிலக்கரிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் கடுமையான மின் நெருக்கடி ஏற்படும் உருவாகியுள்ளது. இதனால் மறியல் போராட்டங்களை கைவிடுமாறு விவசாயிகளுக்கு மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

சமூக நலத்துறை அமைச்சர் சாது சிங் தர்மசோட் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ​​மாநிலத்தின் மின் உற்பத்தி நிலையங்களில் இரண்டு நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி உள்ளன. அதன்பிறகு, அவற்றை மூடும் நிலைக்கு அரசு தள்ளப்படும், இதன் விளைவாக கடுமையான மின் பற்றாக்குறை ஏற்படும்.

மத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிர்பும், போராடும் விவசாயிகளுக்கு முழு ஆதரவையும் முதல்வரும் மாநில அரசும் வழங்கும், இருப்பினும் அத்தியாவசிய தேவைகளுக்காக ரயில் சேவை இயக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம், ஆகையால் ரயில் மறியல் போராட்டத்தை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com