ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

மகாராஷ்டிர வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர்

மகாராஷ்டிரத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை முதல்வர் உத்தவ் தாக்கரே புதன்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

News image

மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே

Updated On :21 அக்டோபர் 2020, 10:08 am

ANI

மகாராஷ்டிரத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை முதல்வர் உத்தவ் தாக்கரே புதன்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

உஸ்மானாபாத் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட கட்டெகாவோ கிராமத்திற்கு சென்று விவசாய நிலங்களில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து விவசாயிகளிடம் நேரில் கேட்டறிந்தார்.

மேலும், தாக்கரே தனது அமைச்சரவையைச் சேர்ந்த மற்ற மூத்த அமைச்சர்களுடன் சேர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழையால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்குச் சென்று, மாவட்ட அதிகாரிகளைச் சந்தித்து பாதிப்பைப் பற்றி ஆலோசனை நடத்தினார்.

மகாராஷ்டிராவின் பல மாவட்டங்களில் கடந்த வாரம் நான்கு நாட்களுக்கு மேலாக பெய்த மழை மற்றும் வெள்ளத்தில் பல விவசாய நிலங்களில் உள்ள பயிர்கள் அழிந்தது. மேலும், 16 பேர் பலியாகியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.