அமெரிக்க வாழ் இந்திய பேராசிரியர் காணவில்லை

வாஷிங்டன் மாகாணத்தில் கடந்த 10 நாள்களாக காணாமல் போன அமெரிக்க வாழ் இந்திய பேராசிரியரை தேடும் பணி நடைபெற்று வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சியாட்டிலின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான 33 வயதான சாம் துபல், மோவிச் ஏரி டிரெயில்ஹெட்டில் இருந்து மதர் மவுண்டன் பகுதிக்கு மலையேறும் நிகழ்வுக்கு அக்டோபர் 9 ஆம் தேதி சென்றுள்ளார். இருப்பினும், அங்கிருந்து அக்டோபர் 12 ஆம் தேதி வெளியேறிய அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கின்றனர்.

இதைத் தொடர்ந்து அவரைத் தேடும் பணிக்காக வாஷிங்டன் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தின் பல குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளது.

இதனிடையே துபேலில் காரை தேடுதல் குழு கண்டுபிடித்துள்ளதாக துபேலின் சகோதரி வீணா தெரிவித்துள்ளார்.

துபல் கடந்த ஜூன் மாதம் வாஷிங்டன் பல்கலைக்கழக மானுடவியல் துறையில் உதவி பேராசிரியராக சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com