
கொடைக்கானலில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பூம்பாறை பகுதிகளிலுள்ள அருள்மிகு குழந்தை வேலப்பர் கோயில் சுற்றுச் சுவர் சேதமடைந்ததுள்ளது.
கொடைக்கானலில் கடந்த 5 நாள்களாக தொடர்ந்து பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையால் கொடைக்கானல் பகுதிகளிலுள்ள அனைத்து நீர் நிலைகளில்தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களான மன்னவனுர், பூம்பாறை, பூண்டி, கிளாவரை, கவுஞ்சி, வில்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது சுமார் இரண்டு மணி நேரம் பெய்த மழையால் பூம்பாறை பகுதிகளிலுள்ள அருள்மிகு குழந்தை வேலப்பர் கோயில் சுற்றுச் சுவர் சேதமடைந்தது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கொடைக்கானல் சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் வட்டாட்சியர் அரவிந்த் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் சென்று பார்வையிட்டனர் மேலும் அப்பகுதியிலுள்ள ஆபத்தான கடைகளை பொக்லைன் இயந்திரம் மூலமாக அகற்றப்பட்டது.
மேலும், தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் பல இடங்களில் சாலைகளும் சேதமடைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.