தலித் இளைஞர் மீது அமிலம் வீசியவருக்கு 10 ஆண்டுகள் சிறை

உத்தரபிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தில் 1996 ஆம் ஆண்டு தலித் இளைஞர் மீது அமிலம் வீசிய குற்றவாளிக்கு வியாழக்கிழமை 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

உத்தரபிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தில் 1996 ஆம் ஆண்டு தலித் இளைஞர் மீது அமிலம் வீசிய குற்றவாளிக்கு வியாழக்கிழமை 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

உத்தரபிரதேசத்தின் எஸ்.சி., எஸ்.டி. சிறப்பு நீதிமன்றத்தில் விசாராணையில் இருந்த இந்த வழக்கில், இந்திய தண்டனைச் சட்டத்தின் 326, 504 மற்றும் 506 பிரிவுகள் மற்றும் எஸ்சி / எஸ்டி சட்டத்தின் பிரிவு 3 ன் கீழ் குற்றவாளி ராம்பலை குற்றவாளி என இன்று நீதிபதி ஹிமான்ஷு பட்நகர் தீர்ப்பளித்தார்.

மேலும், குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 57 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

கடந்த 1996 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி ஷாம்லி மாவட்டத்தின் காந்த்லா நகரத்திற்கு அருகே அப்போதைய 15 வயது பிட்டு என்ற சிறுவன் மீது அமிலம் வீசியதற்காக ராம்பால் மற்றும் ஃபாரூக் ஆகிய இருவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இவ்வழக்கில், விசாரணை தொடங்கியதிலிருந்து மற்றொரு குற்றவாளி ஃபாரூக் தலைமறைவாக உள்ளார் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com