
இந்தியாவில் உள்ள தன்னார்வ அமைப்புகள் கடந்த 3 ஆண்டுகளில் ரூ. 58 ஆயிரம் கோடி வெளிநாட்டு நிதி பெற்றுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
இதுகுறித்து மக்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கூறுகையில்,
நாடு முழுவதும் 2016 முதல் 2019 வரை தன்னார்வ அமைப்புகள் ரூ. 58 ஆயிரம் கோடி வெளிநாட்டு நிதி பெறப்பட்டுள்ளது. இதில், 2016-2017 வரை ரூ. 18,337.66 கோடி, 2017-2018 வரை ரூ. 19,764.64 கோடி, 2018-2019 வரை ரூ. 20,011.21 கோடி தன்னார்வ அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிதிகள் அனைத்தும் வெளிநாட்டு நிதி பெறுவதற்காக பதிவு செய்யப்பட்ட 22,400 தன்னார்வ அமைப்புகளால் பெறப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம்-2010 இன் 11 வது பிரிவின் கீழ் வெளிநாட்டு நிதி பெறும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மதம், சமூகம், பொருளாதாரம், கல்வி அல்லது கலாச்சாரம் ஆகிய பணிகளுக்காக பயன்படுத்தலாம்.
மேலும், நிதியை பெறும் தன்னார்வ அமைப்புகள் அதற்கான ரசீதை கட்டாயமாக இணைதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.