இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கியது

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1965 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கியது

புதுதில்லி: இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1965 ஆக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் 198 நாடுகளுக்கு மேல் வேகமாக பரவி வரும் கரோனா நோய்த்தொற்று, இதுவரை 9 லட்சத்து 35 ஆயிரத்து 587 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை நோய்த்தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 233 ஆக அதிகரித்துள்ளது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 94 ஆயிரத்து 277 பேர் சிகிச்சைக்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளனர். 

இந்தியாவிலும் கரோனாவின் தாக்குதலுக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.  

இந்த நிலையில் இந்தியாவில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1834 இல் இருந்து 1965 ஆக உயர்ந்துள்ளது. நோய்த்தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 41 இல் இருந்து 50 ஆக உயர்ந்துள்ளது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 144 இல் இருந்து 151 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 335 பேரும், கேரளா 265, தமிழ்நாட்டில் 234 பேரும், கர்நாடகத்தில் 110 பேரும், ராஜஸ்தானில் 108 பேரும்  நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com