உலக அளவில் கரோனா பலி 82 ஆயிரத்தை தாண்டியது

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை  82 ஆயிரத்து 74 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14 லட்சத்து 31 ஆயிரத்து 689 ஆக உயர்ந்துள்ளது. 
உலக அளவில் கரோனா பலி 82 ஆயிரத்தை தாண்டியது

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை  82 ஆயிரத்து 74 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14 லட்சத்து 31 ஆயிரத்து 689 ஆக உயர்ந்துள்ளது. 

சீனாவின் வூஹானில் இருந்து பரவத் தொடங்கிய கரோனா, இன்று ஒட்டுமொத்த உலகையே அச்சுறுத்தி வருகிறது. நோய்த்தொற்றால் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இந்த நிலையில் புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி நிலவரப்படி, உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றுக்கு பாலியானவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்து 74 ஆக அதிகரித்துள்ளது. நோய்த்தொற்றுக்கு ஒரே நாளில் சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் 14 லட்சத்து 31 ஆயிரத்து 689-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நோய்த்தொற்றுக்கு அதிகயளவில் இத்தாலியில் 17,127 பேரும், ஸ்பெயினில் 14,045 பேரும், அமெரிக்காவில் 12,854 பேரும், பிரான்ஸ் 10,328, இங்கிலாந்தில் 6,159, ஈரானில் 3,872 பேரும்,     சீனாவில் 3,333 பேரும், ஜெர்மனியில்  2,016 பேரும், பெல்ஜியத்தில் 2,035 பேரும், நெதர்லாந்தில் 2,101 பேரும், சுவிஸ்சர்லாந்தில் 821 பேரும், துருக்கியில் 725 பேரும் அதிகயளவில் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் நோய்த்தொற்று சிகிச்சை பெற்றவருபவர்களில் 3 லட்சத்து 2 ஆயிரத்து 142 பேர் குணமடைந்துள்ளனர். 

அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்றால் பலியானவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை 12 ஆயிரத்தைக் கடந்தது. நோய்த்தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதால் நிலைமையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அங்கு கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4,00,412-ஐத் தாண்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com