கரோனா பலி எண்ணிக்கை 96 ஆயிரத்தை  நெருங்குகிறது 

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 96 ஆயிரத்தை நெருங்கியது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்


வாஷிங்டன்: உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 96 ஆயிரத்தை நெருங்கியது. நோய்த்தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்தைத் தாண்டியது. 

220-க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா நோய்த்தொற்று பரவியுள்ளது. இதில், 192 நாடுகளில் அந்த நோய் பாதிப்பால் 95 ஆயிரத்து 735-க்கும் மேற்பட்டவா்கள் பலியாகியுள்ளனா், நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து 3 லட்சத்து 56 ஆயிரத்து 660 பேர் குணமடைந்துள்ளனர், நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் 16 லட்சத்து 4 ஆயிரத்து 718 பேர்களில் 48 ஆயிரத்து 953 பேரின் நிலைமை கவலைக்கிடமாக என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கரோனா நோய்த்தொற்றுக்கு அமெரிக்காவில் 16,697 பேரும், இத்தாலியில் 18,279 பேரும், ஸ்பெயினில் 15,447 பேரும்,  பிரான்ஸில் 12,210 பேரும், இங்கிலாந்தில் 7,978 பேரும், ஜெர்மனியில் 2,607 பேரும், ஈரானில் 4,110 பேரும், சீனாவில் 3,335 பேரும், பெல்ஜியத்தில்  2,523 பேரும், நெதர்லாந்தில் 2,396 பேரும், பிரேசில் 941 பேரும், துருக்கியில்  908 பேரும், சுவிஸ்சர்லாந்தில்  948 பேரும், ஸ்வீடனில் 793 பேரும்,  கனடாவில்  504 பேரும் உயிரிழந்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com