கரோனா: இந்தியாவில் பாதிப்பு 8,356 ஆக உயர்வு

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 7,529-இல் இருந்து 8,356 அதிகரித்துள்ளது என்றும், உயிரிழந்தோா் எண்ணிக்கை 273 -ஆக உயர்ந்துள்ளது
கரோனா: இந்தியாவில் பாதிப்பு 8,356 ஆக உயர்வு


நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 7,529-இல் இருந்து 8,356 அதிகரித்துள்ளது என்றும், உயிரிழந்தோா் எண்ணிக்கை 273 -ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி (ஏப்.12) இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,529 இல் இருந்து 8,356 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 242 இல் இருந்து 273 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 827 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 716 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். 

மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக, 1,761 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதைத் தொடா்ந்து தில்லியில் 1,069 போ், தமிழகத்தில் 969 பேர், ராஜஸ்தானில் 709 போ், தெலங்கானாவில் 504 போ், மத்தியப் பிரதேசத்தில் 532 போ், உத்தரப் பிரதேசத்தில் 433 போ், குஜராத்தில் 432 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கேரளத்தில் 364 போ், ஆந்திரத்தில் 381 போ், , கா்நாடகத்தில் 214 போ், ஜம்மு-காஷ்மீரில் 207 போ், ஹரியாணாவில் 177 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதேபோல், பஞ்சாபில் 132 போ், மேற்கு வங்கத்தில் 126 போ், பிகாரில் 60 போ், ஒடிஸாவில் 48 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். உத்தரகண்டில் 35 பேரும், அஸ்ஸாமில் 29 பேரும் ஹிமாசலப் பிரதேசத்தில் 28 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

சத்தீஸ்கா், சண்டீகரில் தலா 18 பேரும், லடாக்கில் 15 பேரும், ஜாா்க்கண்டில் 14 பேரும், அந்தமான் நிகோபரில் 11 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதுவரை 1.7 லட்சம் பேருக்கு கரோனா நோய்த்தொற்று பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com