தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

திருச்சியில் கரோனா சிகிச்சைபெற்ற 32 பேர் வீடு திரும்பினர்: வாழ்த்தி அனுப்பிய ஆட்சியர்

திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர்

News image
Updated On :16 ஏப்ரல் 2020, 4:50 am


திருச்சி: திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 32 பேர் வியாழக்கிழமை அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு, அனைவருக்கும் பழ வகைகளை வழங்கி வாழ்த்தி வழியனுப்பினார். மருத்துவக் குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்தார். திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 43 பேர், ஈரோடு, பெரம்பலூர், அரிலூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த தலா ஒருவர் என 47 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.

Story image

இவர்களில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் பூரண குணமடைந்து கடந்த 10ஆம் தேதி வீட்டுக்கு அனுப்பப்பட்டார். மீதமுள்ளவர்களில் 32 பேருக்கு கரோனா தொற்று இல்லை என்பது தொடர் மருத்துவப் பரிசோதனையில் செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் 24 மணிநேரத்துக்கு புதன்கிழமை முழுவதும் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தனர். வியாழக்கிழமை அனைவரும் அவரவர் வீடுகளுக்கு அனுப்பபட்டனர்.

இதில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 29 பேர், பெரம்பலூர், அரியலூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஒருவர் குணமடைந்துள்ளனர். அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். தொடர்ந்து 14 நாள்களுக்கு தனிமைப்படுத்தி மருத்துவக் கண்காணிப்பில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.