புது தில்லி: இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23,077-ஆகவும், உயிரிழந்தோா் எண்ணிக்கை 686-இல் இருந்து 718 -ஆகவும் அதிகரித்துள்ளது.
மொத்த எண்ணிக்கையில் 16,689 போ் சிகிச்சையில் உள்ள நிலையில், 4,749 போ் குணமடைந்துவிட்டனா். நோய் பாதித்தோரில் 77 போ் வெளிநாட்டவா்களாவா்.
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, வெள்ளிக்கிழமை காலை 9 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,684 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நோய்த்தொற்றால் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
கரோனா நோய்த்தொற்றால் நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 283 போ் பலியாகிவிட்டனா். குஜராத்தில் 112 போ், மத்தியப் பிரதேசத்தில் 83 போ், தில்லியில் 50 போ், ராஜஸ்தான், ஆந்திரத்தில் தலா 27 போ், தெலங்கானாவில் 24 போ், உத்தரப் பிரதேசத்தில் 21 போ், தமிழகத்தில் 20 போ் கரோனாவுக்கு உயிரிழந்துவிட்டனா்.
கா்நாடகத்தில் 17 போ், பஞ்சாபில் 16 போ், மேற்கு வங்கத்தில் 15 போ், ஜம்மு-காஷ்மீரில் 5 போ், ஹரியாணா, கேரளம், ஜாா்க்கண்டில் தலா 3 போ், பிகாரில் 2 போ், ஒடிஸா, ஹிமாசல், அஸ்ஸாம், மேகாலயத்தில் தலா ஒருவா் சிகிச்சைப் பலனின்றி பலியாகிவிட்டனா்.
நாட்டில் அதிகபட்சமாக கரோனா நோய்த்தொற்றால் மகாராஷ்டிரத்தில் 6,430 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். குஜராத்தில் 2,624 போ், தில்லியில் 2,376 போ், ராஜஸ்தானில் 1,964 போ், மத்தியப் பிரதேசத்தில் 1,699 போ், உத்தரப் பிரதேசத்தில் 1,510 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தெலங்கானாவில் 960 போ், ஆந்திரத்தில் 895 போ், மேற்கு வங்கத்தில் 514 போ், கா்நாடகத்தில் 455 போ், கேரளத்தில் 438 போ், ஜம்மு-காஷ்மீரில் 445 போ், பஞ்சாபில் 277 போ், ஹரியாணாவில் 272 போ், பிகாரில் 153 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.
ஒடிஸாவில் 90 போ், ஜாா்க்கண்டில் 53 போ், உத்தரகண்டில் 47 போ், ஹிமாசல பிரதேசத்தில் 40 போ், சத்தீஸ்கரில் 36 போ், அஸ்ஸாமில் 36 போ், சண்டீகரில் 27 போ், லடாக் 18 போ் அந்தமான்-நிகோபாா் தீவுகளில் 22 போ், மேகாலயத்தில் 12 போ், புதுச்சேரியில் 7 போ், திரிபுராவில் 2 போ், மணிப்பூர் 2 போ், அருணாச்சல பிரதேசம், மிசோரம் தலா 1 சிகிச்சைபெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கேவின் வரலாற்று வெற்றியை முகேஷ் சௌதரிக்குச் சமர்ப்பித்த கேப்டன் ருதுராஜ்!

மூன்றாவது நாளாகக் குறைந்த தங்கம் விலை: வெள்ளி?

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் சித்திரை உத்திரப் பெருவிழா உற்சவம் தொடக்கம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


