இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 12th August 2020 12:24 PM | Last Updated : 12th August 2020 12:24 PM | அ+அ அ- |

இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
வந்தவாசி : மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை கண்டித்து இந்திய குடியரசு கட்சி சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் வந்தவாசி தேரடியில் உள்ள அஞ்சல் அலுவலகம் முன் புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி அந்த கட்சியினர் கண்களில் கருப்புத் துணி கட்டிக் கொண்டும், கையில் பாடப் புத்தகத்தை வைத்துக் கொண்டும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் வந்தை மோகன் தலைமை வகித்தார். மாநில இளைஞரணி செயலாளர் சி.எஸ்.கெளரிசங்கர், மாநில செயற்குழு உறுப்பினர் எம்.கோவிந்தராஜன், மாவட்ட அமைப்புச் செயலர் எம்.பி.ரவிச்சந்திரன், சென்னாவரம் ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.வீரராகவன், நகரத் தலைவர் எம்.ரமேஷ்பாபு, நகரச் செயலர் குட்டி, ஒன்றிய தலைவர் பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும், ரயில்வே துறை தனியார்மயமாக்கலை கைவிட வேண்டும், தற்காலிக தூய்மைப் பணியாளர்களை நிரந்தரமாக்க வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தினர் கோஷமிட்டனர்.