இந்தோனேசியாவில் இன்று தடுப்பூசி பரிசோதனை
By PTI | Published On : 14th August 2020 11:31 AM | Last Updated : 14th August 2020 11:31 AM | அ+அ அ- |

கோப்புப்படம்
சின நிறுவனம் தயாரித்த கொவைட் 19 தடுப்பூசியை இந்தோனேசியாவின் தன்னார்வலர்களிடம் வெள்ளிக்கிழமை பரிசோதனை செய்யவுள்ளனர்.
இந்தோனேசிய அரசாங்கம் அரசுக்கு சொந்தமான பயோ பார்மா நிறுவனமும், சீன நிறுவனமான சினோவாக் பயோடெக் நிறுவனமும் கடந்த ஜூலை முதல் ஒப்பந்தம் செய்தது.
இவர்கள் தயாரித்த கொவைட் 19 தடுப்பூசியை இந்தோனேசியாவில் உள்ள 1,620 தன்னார்வலர்களுக்கு இன்று செலுத்தவுள்ளனர். இதற்கு முன் செவ்வாயன்று இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் 20 பேருக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இவர்களின் உடல்நிலையை பரிசோதித்த பின்னர் 14 நாள்கள் கழித்து இவர்களுக்கு இரண்டாவது டோஸ் வழங்கப்படும்.
இதுகுறித்து இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ கூறுகையில்,
ஜனவரி மாதத்திற்குள் இந்தோனேசியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் தடுப்பூசிப் செலுத்த திட்டமிட்டுள்ளோம். அதற்கு முன் உற்பத்தி தயாராகினால் உடனடியாக அனைவருக்கும் செலுத்தப்படும் என கூறினார்.