

போடி: போடியில் ஞாயிற்றுக்கிழமை தளர்வில்லா பொதுமுடக்கத்தால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. திருமண நிகழ்வுகளில் சமூக இடைவெளியின்றி மக்கள் பங்கேற்றனர்.
ஆகஸ்ட் மாதம் முழுவதும் அனைத்து ஞாயிற்றுக்கிழமையும் தளர்வில்லா பொதுமுடக்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்த நிலையில் நான்காவது ஞாயிற்றுக்கிழமை இன்று போடியில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இறைச்சி கடைகள் வழக்கம்போல் காலையில் செயல்பட்டது. காமராஜர் சாலை, பெரியாண்டவர் நெடுஞ்சாலை, உத்தமபாளையம் சாலையில் வாகனங்கள் சென்று வந்தாலும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை சுப முகூர்த்த நாளாக இருந்ததால், ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்த திருமண நிகழ்ச்சிகள் திருமண மண்டபங்களில் நடைபெற்றது. வான வேடிக்கைகள், செண்டை மேளங்களுடன் நடைபெற்ற திருமண நிகழ்வுகளில் மக்கள் சமூக இடைவெளியின்றி பங்கேற்றனர். திருமண வீட்டார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தாலும் பொதுமக்கள் பலர் முக கவசம் அணியாமல் திருமணத்திற்கு வந்தனர்.
போடியில் அம்மா உணவகம், மருந்தகங்கள், பால் விற்பனை கடைகள் வழக்கம்போல் செயல்பட்டன. திருமண நிகழ்வுகளுக்கு வந்த சிலர் பரிசு பொருட்கள் கிடைக்காமல் அலைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.