போராட்டத்திலிருந்து திரும்பிய 4 விவசாயிகள் விபத்தில் பலி
By PTI | Published On : 15th December 2020 05:08 PM | Last Updated : 15th December 2020 05:11 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
தில்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுவிட்டு வீட்டிற்கு திரும்பிய 4 விவசாயிகள் இரு வேறு விபத்துகளில் பலியாகினர்.
ஹரியாணாவின் கர்னல் மாவட்டம் தாரோரி அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை டிராக்டர் மீது லாரி மோதியதில் பஞ்சாப்பை சேர்ந்த இரண்டு விவசாயிகள் பலியாகினர்.
மேலும் ஒரு விவசாயி பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மொஹாலி அருகே நடந்த மற்றொரு விபத்தில், லாரி மோதியதில் பஞ்சாப்பை சேர்ந்த தீப் சுங் மற்றும் சுக்தேவ் சிங் ஆகிய 2 விவசாயிகள் பலியாகினர்.
மேலும் 7 பேர் காயத்துடன் மொஹாலியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த விவசாயிகளை பஞ்சாப் சுகாதார அமைச்சர் பல்பீர் சிங் சித்து நேரில் சந்தித்தார்.
மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா மற்றும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் கடந்த 20 நாள்களாக தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது.