தமிழகத்தில் 7 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்
By DIN | Published On : 15th December 2020 06:47 PM | Last Updated : 15th December 2020 07:03 PM | அ+அ அ- |

தமிழக அரசு
இந்திய காவல் பணி அதிகாரிகள் 7 பேரை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில்,
சென்னை அமலாக்கப் பிரிவின் மண்டல காவல்துறை தலைவராக(ஐ.ஜி.) செந்தாமரைக் கண்ணன், டான்ஜெட்கோ (தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம்) லஞ்ச ஒழிப்புத்துறை தலைவராக (டிஜிபி) பிராஜ் கிஷோர் ரவி, சென்னை சைபர் கிரைம் பிரிவு -1ன் காவல் கண்காணிப்பாளராக சுதாகர் ஆகியோரை நியமித்துள்ளது.
மேலும், தமிழக காவல் தலைமையக மண்டல தலைவராக(ஐ.ஜி.) ஜோஷி நிர்மல், சென்னை காவல் தொழில்நுட்ப சேவை பிரிவின் துணைத் தலைவராக(ஏ.டி.ஜி.பி) அமரேஷ் புஜாரி, ஊனமாஞ்சேரி காவல் அகாடமியின் துணைத் தலைவர்(ஏ.டி.ஜி.பி) மற்றும் இயக்குநராக டேவிட்சன் மற்றும் காவல்துறை செயலாக்கப் பிரிவின் கூடுதல் தலைவராக சந்தீப் மிட்டலை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.