ஆந்திரத்தில் 500, கர்நாடகத்தில் 1,185 பேருக்கு கரோனா
By DIN | Published On : 15th December 2020 08:03 PM | Last Updated : 15th December 2020 08:03 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்புகள் வெளியாகியுள்ளன.
ஆந்திரம்:
ஆந்திரத்தில் புதிதாக 500 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த பாதிப்பு 8,76,336 ஆக உயர்ந்துள்ளது. இதில் 4,660 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 8,64,612 பேர் குணமடைந்துள்ளனர், 7,064 பேர் பலியாகியுள்ளனர்.
கர்நாடகம்:
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,185 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 11 பேர் பலியாகியுள்ளனர். கர்நாடகத்தில் இதுவரை மொத்தம் 9,03,425 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 8,75,796 பேர் குணமடைந்துள்ளனர், 11,965 பேர் பலியாகியுள்ளனர். 15,645 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.