'அப்பன் பிறந்த வீடு'
By DIN | Published On : 15th December 2020 07:38 PM | Last Updated : 15th December 2020 07:42 PM | அ+அ அ- |

எட்டயபுரத்தில் உள்ள பாரதி பிறந்த இல்லத்தில் கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமலஹாசன் சட்டசபை தேர்தலை முன்னிட்டு சீரமைப்பும் தமிழகத்தை என்ற தலைப்பில் பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகிறார்.
பயணத்தின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை மாலை 5.45 மணி அளவில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் வருகை தந்த கமலஹாசன் எட்டயபுரம் பேருந்து நிலையம் முன்பு பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து எட்டயபுரத்தில் உள்ள பாரதி பிறந்த இல்லத்தில் பாரதியின் சிலை அருகே கட்சி நிர்வாகிகளுடன் நின்று வணங்கினார். பின்னர் பாரதி இல்லத்தில் உள்ள போட்டோ ஆல்பங்களை பார்வையிட்டார்.
பின்னர் அங்குள்ள பார்வையாளர் வருகை பதிவேட்டில் அய்யன் என் கவிதைக்கு.. அப்பன் பிறந்த வீடு.. அய்யா பாரதி என் அறிவு பிறந்த வீடு. அன்பன் கமலஹாசன் என எழுதினார்.
இதையடுத்து அவர் 6.15 மணியளவில் தூத்துக்குடி புறப்பட்டுச் சென்றார்.