ஹைவேவிஸ் மலைக் கிராமத்தில் காட்டு யானை மிதித்து கூலித் தொழிலாளி பலி
By DIN | Published On : 15th December 2020 08:25 PM | Last Updated : 15th December 2020 08:25 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
உத்தமபாளையம்: தேனி மாவட்டம் ஹைவேவிஸ் மலைக் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை, காட்டு யானை மிதித்து தேயிலைத் தோட்ட கூலித்தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஹைவேவிஸ் பேரூராட்சியில் 7 மலைக் கிராமங்கள் உள்ளன. 8 ஆயிரம் பேர் வசிக்கும் நிலையில் பெரும்பான்மையோர் தேயிலைத் தோட்டத்தில் கொளுந்துபரித்தல், மருந்து அடித்தல், உரம் போடுதல் என பல்வேறு பராமரிப்பு பணிகளை செய்கின்றனர். இதற்கிடையே, இந்த மலைக்கிராம குடியிருப்பு பகுதிகளில் யானை நடமாட்டம் கடந்த சில மாதங்களாகவே இருந்தாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வனத்துறையிடம் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், மணலார் எஸ்டேட் பகுதியை சேர்ந்த அம்மாவாசி(58). மனைவி மற்றும் மகன் , மாற்றுத்திறனாளி மகள் உள்ளனர். செவ்வாய் கிழமை தேயிலைத்தோட்டத்திற்கு உரம் போட்டு விட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளார். அப்போது தேயிலைத் தோட்டத்தில் இருந்த காட்டு யானை ஒன்று தாக்கி காலால் மிதித்ததில் சம்பவயிடத்திலே பரிதாபமாக இறந்து விட்டதாக அப்பகுதி மக்கள் ஹைவேவிஸ் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இது குறித்து தகவவின் பேரில் சம்பவயிடத்திற்கு சென்ற ஹைவேவிஸ் காவல்துறையினர் மற்றும் சின்னமனூர் வனச்சரக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...