‘காங்கிரஸ் எப்போதும் விவசாயிகளுக்கு எதிரானது’: தோமர்
By ANI | Published On : 24th December 2020 04:55 PM | Last Updated : 24th December 2020 04:55 PM | அ+அ அ- |

வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் (கோப்புப்படம்)
காங்கிரஸ் கட்சி எப்போதும் விவசாயிகளுக்கு எதிராக தான் செயல்படும் என மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விமர்சித்துள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து சில விவசாய சங்கத்தினர் மத்திய அமைச்சர் தோமரை வியாழக்கிழமை சந்தித்தனர்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் தோமர் பேசியதாவது,
வேளாண் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பாக்பாத்தைச் சேர்ந்த விவசாயிகள் என்னிடம் கடிதம் கொடுத்துள்ளனர். வேளாண் சட்டங்களில் எந்த திருத்தமும் செய்ய வேண்டியதில்லை என்று அவர்கள் என்னிடம் கூறியுள்ளனர்.
மேலும், ராகுல் காந்தி இன்று குடியரசுத் தலைவரை சந்தித்து வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கையெழுத்திட்ட கடிதத்தை அளித்தார். ஆனால் என்னிடம் விவசாயிகள் கூறியதாவது, கங்கிரஸ் கட்சியினர் யாரும் எங்கள் கையெழுத்தை வாங்க வரவில்லை என தெரிவித்தார்கள்.
ராகுல் காந்தி அவ்வளவு கவலைப்பட்டிருந்தால், அவர்களது ஆட்சியில் விவசாயிகளுக்கு ஏதேனும் நன்மை செய்யதிருக்க முடியும். காங்கிரஸ் எப்போதும் விவசாயிகளுக்கு எதிரானவர்கள். எனத் தெரிவித்தார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...