‘கூட்டணி கட்சிகள் இணைந்து ஒற்றுமையாக செயல்படுவோம்’: பரூக் அப்துல்லா
By ANI | Published On : 24th December 2020 04:24 PM | Last Updated : 24th December 2020 04:25 PM | அ+அ அ- |

ஃபரூக் அப்துல்லா
ஜம்மு - காஷ்மீரில் கூட்டணி கட்சிகள் இணைந்து ஒற்றுமையாக செயல்படுவோம் என பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீரில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில், பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி, மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி), மக்கள் மாநாடு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் உருவாக்கிய குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி அதிகபட்சமாக 110 இடங்களில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், வியாழக்கிழமை கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்கள் ஸ்ரீநகரில் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பரூக் அப்துல்லா கூறியதாவது,
குப்கர் கூட்டணி உருவாக்கும் போது இருந்ததைவிட தற்போது வலுவாக உள்ளது. நாங்கள் தொடர்ந்து ஒற்றுமையாக செயல்படுவோம் எனக் கூறினார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...