தமிழகத்தில் மேலும் 1,035 பேருக்கு கரோனா
By DIN | Published On : 24th December 2020 07:24 PM | Last Updated : 24th December 2020 07:24 PM | அ+அ அ- |

தமிழகத்தில் புதிதாக 1,035 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,11,115 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 296 பேருக்கு, கோவை மாவட்டத்தில் 98 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 12 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 12,036 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 1,120 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 7,89,862 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 9,217 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...