பைக் தகராறில் இளைஞர் கத்தியால் குத்தி கொலை
By DIN | Published On : 17th February 2020 09:27 AM | Last Updated : 17th February 2020 09:27 AM | அ+அ அ- |

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் பைக் தகராறில் இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் தயாளன் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமம் அம்பேத்கார் நகர் பகுதியை சேர்ந்தவர் அபி (18) என்பவரை அதே பகுதியை சேர்ந்த குமார், தயாளன் ஆகிய இருவரும் சேர்ந்து ஞாயிற்றுக்கிழமையில் குடி போதையில் பைக் ஓட்டி வந்த தகராறில் அபியை கத்தியால் குத்தி கொலை செய்தனர்.
இந்த நிலையில் தயாளன் என்பவரை ஜோலார்பேட்டை போலீஸார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள குமார் என்பவரை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.