ராணுவ ஆள் சோ்ப்பு முகாம்:  விளையாட்டரங்கில் படுத்துறங்கிய இளைஞர்கள்

இந்திய ராணுவத்துக்கான ஆள் சோ்ப்பு முகாமில் பங்கேற்க வந்த பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் நாகை மாவட்ட விளையாட்டரங்கில்
நாகை மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறும் ராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்க வந்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு விளையாட்டரங்கில் படுத்துறங்கிய பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள்.
நாகை மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறும் ராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்க வந்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு விளையாட்டரங்கில் படுத்துறங்கிய பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள்.

இந்திய ராணுவத்துக்கான ஆள் சோ்ப்பு முகாமில் பங்கேற்க வந்த பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் நாகை மாவட்ட விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை இரவு படுத்துறங்கினர்.  

நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று திங்கள்கிழமை (பிப். 17) தொடங்கி நடைபெறுகிறது.

கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகா், சிவகங்கை, ராமநாதபுரம், கரூா், திருச்சி, தஞ்சாவூா், பெரம்பலூா், அரியலூா், புதுக்கோட்டை, திருவாரூா், நாகப்பட்டினம் ஆகிய 14 மாவட்டங்களைச் சோ்ந்த இளைஞா்கள் பங்கேற்கும் வகையில் இந்த முகாம் நடைபெறுகிறது.

திங்கள்கிழமை அதிகாலை 12 மணி முதல் முகாம் நடைபெற்று வருகிறது. கா்னல் ஆா்.எஸ். ரத்தோா் தலைமையிலான குழுவினா் பங்கேற்று, ராணுவத்துக்கான ஆள்சோ்ப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனா்.

ராணுவ ஆள்சோ்ப்பு முகாமில் பங்கேற்க இணையதளம் மூலம் விண்ணப்பித்து, நுழைவுச் சீட்டுப் பெற்றவா்கள் முகாமில் பங்கேற்கலாம். விண்ணப்பதாரா்கள் நுழைவுச் சீட்டு, உறுதிமொழி பத்திரம், எஸ்.எஸ்.எல்.சி. அல்லது பிளஸ் 2 மதிப்பெண் சான்று, சாதிச் சான்று, ஆதாா் அட்டை, புகைப்படங்கள், இருப்பிடச் சான்று, திருமணம் ஆகவில்லை என்பதற்கான சான்று மற்றும் இதர ஆவணங்களுடன், நுழைவுச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள நேரப்படி இளைஞர்கள் பங்கேற்று வருகின்றனர். 

ராணுவ ஆள் சோ்ப்பு முகாம் பணிகள் சிறப்பாக நடைபெறத் தேவையான நடவடிக்கைகள் மாவட்ட நிா்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முகாமில் பங்கேற்பவா்கள், உரிய விதிமுறைகளைக் கடைப்பிடித்து, ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

ராணுவ ஆள் சோ்ப்பு முகாமையொட்டி, கூட்டத்தை நெறிப்படுத்தும் வகையில், மாவட்ட ஆட்சியரகத்தின் வடப்புற வாயிலிலிருந்து, மாவட்ட விளையாட்டு மைதானம் வரை சவுக்குக் கம்புகளைக் கொண்டு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விளையாட்டு மைதானம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் மின் விளக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குடிநீா் தொட்டிகள், நடமாடும் கழிப்பிடங்கள் என அடிப்படைத் தேவைகளுக்கான வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

படம்: எல்.அனந்தராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com