விவசாய நிலத்தில் இறால் பண்ணைகள் அமைக்க எதிர்ப்பு: பூவலையில் ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலை பகுதியில் விவசாய நிலங்களுக்கு மத்தியில் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கப்படுவதை கண்டித்து
விவசாய நிலத்தில் இறால் பண்ணைகள் அமைக்க எதிர்ப்பு: பூவலையில் ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலை பகுதியில் விவசாய நிலங்களுக்கு மத்தியில் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கப்படுவதை கண்டித்து அப்பகுதி மக்கள் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலை ஊராட்சிக்கு உட்பட்ட பூவலை மற்றும் தண்டலம் கிராமங்களுக்கு இடையே விவசாய நிலங்களுக்கு மத்தியில் 10ஏக்கர் பரப்பில் இறால் பதப்படுத்தப்படும் தொழிற்சாலை அமைக்க புதன்கிழமை பூமி பூஜை நடத்த தொழிற்சாலை நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்தனர்.

இது குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு விரைந்து விவசாயத்தை அழித்து, நிலத்தடி நீரை மாசுபடுத்தும் மேற்கண்ட இறால் பண்ணை தொழிற்சாலை இங்கு இயங்ககூடாது என கூறி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆரம்பாக்கம் போலீஸார் பொதுமக்களிடம் பேசிய போது, ஏற்கெனவே பூவலை பகுதியை ஒட்டி கொண்டமாநெல்லூரில் இதே போன்று இறால் தொழிற்சாலை நடைபெற்று வரும்நிலையில், இந்த தொழிற்சாலை கழிவுகளாலும், தொழிற்சாலை பயன்பாட்டிற்கு போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணறினால்   நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளதோடு,அங்கு குடிநீரின் தன்மையே மாறியுள்ளது.

இந்நிலையில் பூவலையில் அதே போன்று தொழிற்சாலை அதுவும் விவசாய நிலங்களுக்கு மத்தியில் அமைந்தால் அப்பகுதியில் விவசாயம் பாதிக்கப்படும் , இதனை கருத்தில் கொண்டே குடியரசு தினத்தன்று நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மேற்கண்ட தொழிற்சாலை செயல்பட அனுமதி மறுத்து தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது என்றார்கள்.

தொடர்ந்து இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட போலீஸார் கூறியதை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் அங்கிருந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com