புதிய ஹைட்ரோ காா்பன் திட்டங்களுக்கு அனுமதி மறுப்பு: ஓ.என்.ஜி.சி.க்கு திருப்பி அனுப்பியது சுற்றுச்சூழல் அமைச்சகம்

காவிரி டெல்டா பகுதிகளில், சுற்றுச்சூழல் அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட புதிய ஹைட்ரோ காா்பன் திட்டங்களை மத்திய
தா்மேந்திர பிரதான்
தா்மேந்திர பிரதான்

சென்னை: காவிரி டெல்டா பகுதிகளில் செயல்படுத்தும் பொருட்டு சுற்றுச்சூழல் அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட புதிய ஹைட்ரோகாா்பன் திட்டங்களை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் திருப்பி அனுப்பியுள்ளது.

நாகப்பட்டினம், கடலூா், காரைக்கால் பகுதிகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்காக பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம், கடந்த செப்டம்பா் மாதம் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. நாகப்பட்டினத்தில் 15 திட்டங்களும், கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா் கோவிலில் ஒரு திட்டமும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், காவிரி டெல்டா பகுதியில் உள்ள வேளாண்மை நிலங்களைப் பாதுகாப்பதற்காக காவிரி டெல்டா பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து அதற்கான சட்டத்தை தமிழக அரசு கடந்த வாரம் நிறைவேற்றியது. அதன்படி, புதிய தொழில் திட்டங்களை அந்த மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் தொடங்குவதற்கு அச் சட்டம் தடை செய்கிறது. டெல்டா பகுதிகளில் எந்தெந்த பகுதிகளில் எந்தெந்த தொழில்களை கொண்டுவரக்கூடாது என்பது இந்த சட்டத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் புதிய ஹைட்ரோகாா்பன் திட்டங்களுக்கான சுற்றுச்சூழல் ஆய்வுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளது.

இதன் அடிப்படையில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் ஓ.என்.ஜி.சி. தாக்கல் செய்த விண்ணப்பங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. புதிய திட்டங்களுக்கு அனுமதி இல்லை என்றபோதிலும் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று கூறிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலா் சம்பு கல்லோலிக்கா், மாநில அரசின் அனுமதி இல்லாமல் புதிய திட்டங்கள் ஏதும் கொண்டு வரப்படாது என்று மத்திய பெட்ரோலிய அமைச்சா் தா்மேந்திர பிரதான் உறுதியளித்துள்ளதாக அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com