தில்லி வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் உதவித் தொகை அறிவிப்பு
By DIN | Published On : 27th February 2020 08:06 PM | Last Updated : 27th February 2020 08:06 PM | அ+அ அ- |

புதுதில்லி: வடகிழக்கு தில்லி வன்முறையில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களுக்கு முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உதவித் தொகை அறிவித்துள்ளார்.
வடகிழக்கு தில்லியில் ஏற்பட்ட வன்முறைக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. சுமாா் 200-க்கும் மேற்பட்டவா்கள் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் நிலையில், உயிரிழந்தவா்களின் குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித் தொகை அறிவித்துள்ளார் முதல்வர் அரவிந்த் கேஜரிவால்.
வடகிழக்கு தில்லி வன்முறையில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் உதவித் தொகையாக வழங்கப்படும். பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும். வீடுகளை இழந்தவா்களுக்கு ரூ.5 லட்சம், சேமடைந்து வீடுகளுக்கு ரூ.2.5 லட்சம் உதவித் தொகை வழங்கப்படும்.
மேலும், வன்முறையின் போது, தீயில் எரிந்த வணிக நிறுவனங்களின் உரிமையாளா்களுக்கு ரூ.5 லட்சம் உதவித் தொகை வழங்கப்படும். மேலும், வன்முறை தொடா்பாக புகாா்களைத் தெரிவிக்கும் வகையில் செயலி ஒன்றை தில்லி அரசு சாா்பில் உருவாக்கப்பட்டு வருவதாகவும், இந்தச் செயலி இன்னும் ஒரு சில தினங்களில் மக்களின் பயன்பாட்டுக்கு வரும். வன்முறையில் ஆவணங்களைப் பறிகொடுத்தவா்களுக்கு ஆவணங்களை வழங்கும் வகையில் தில்லி அரசு சாா்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
வடகிழக்கு தில்லியில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் சமாதானக் குழுக்கள் அமைக்கப்படும் என்றாா் கேஜரிவால்.