அந்நிய வர்த்தகத்திற்கு எதிர்ப்பு: வெளிநாட்டு பொருட்களுக்கு தீ வைத்து எரித்து போராட்டம்

விழுப்புரத்தில் அந்நிய வர்த்தகத்திற்கு எதிராக வெளிநாட்டு பொருட்களுக்கு தீ வைத்து எரித்து போராட்டம்.. வெள்ளையன் தலைமையில்
அந்நிய வர்த்தகத்திற்கு எதிர்ப்பு: வெளிநாட்டு பொருட்களுக்கு தீ வைத்து எரித்து போராட்டம்


விழுப்புரம்: விழுப்புரத்தில் அந்நிய வர்த்தகத்திற்கு எதிராக வெளிநாட்டு பொருட்களுக்கு தீ வைத்து எரித்து போராட்டம்.. வெள்ளையன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 25 பெர் கைது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில், விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் எதிரில் மாநில தலைவர் வெள்ளையன் முன்னிலையில் இன்று அந்நியப் பொருள்கள் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் அம்பேத்கர் சிலை முன்பு அந்நிய குளிர்பானங்கள் மற்றும் பண்டக பொருட்கள் உள்ளிட்டப் பொருட்களை தீயிட்டு கொளுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  ஆர்ப்பாட்டத்தில் நம்முடைய பாரம்பரிய சில்லரை வணிகத்தை அன்னியர்கள் அபகரித்து இருப்பதும், அன்னியப் பொருள்களின் சந்தையாக இந்தியா உருமாறி இருப்பதுதான் நாட்டின் பொருளாதார மந்த நிலைக்கு முழு காரணம்.

இந்த பொருளாதார பேரழிவிலிருந்து நாட்டை காக்க உள்நாட்டு உற்பத்தி பொருட்கள் பயன்பாட்டை ஊக்குவிப்பதுதான் ஒரே வழி என்றும், சுதேசி என்கிற காந்தி ஆயுதத்தின் மூலம் அன்னிய வர்த்தக சதியை நம்மால் முறியடிக்க முடியும் என்றும், இன்றைய நிலையில் தரத்தில் குறைந்த அந்நிய பொருட்களை கவர்ச்சி விளம்பரம் மூலம், எளிய வாடிக்கையாளர்கள் மீது திணிக்கும் மோசடியை, நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம் எனவும் அண்ணல் காந்திஜி, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி, மகாகவி பாரதியார் வழியில் அன்னியப் பொருள்களை தீக்கிரையாக்கி உள்நாட்டு உற்பத்தியை தூக்கி நிறுத்துவோம் என கோஷங்கள் எழுப்பி, அன்னிய பொருட்களுக்கு எதிராக அன்னியப் பொருள்களை தீயிட்டுக் கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் சிறை படுத்தப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com