பாஜக மாநில பொதுச் செயலாளர் வீட்டில் கொள்ளை
By DIN | Published On : 10th January 2020 11:16 AM | Last Updated : 10th January 2020 11:16 AM | அ+அ அ- |

ஓசூர்: ஓசூரில் பாஜக மாநில பொதுச் செயலாளர் வீட்டின் பூட்டை உடைத்து பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ள மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ரயில் நிலையம் எதிரே பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் கே எஸ் நரேந்திரன் வசித்து வருகிறார். இவர் மற்றும் குடும்பத்தினர் வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார்.
இந்நிலையில், இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவில் இருந்த பொருட்களை திருடி சென்றுள்ளனர். வீட்டுக்குள் இருந்த பூரோ உடைக்கப்பட்டு, பொருட்கள் சிதறிக் கிடந்தன.
தகவலறிந்த நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மாநில பாஜக பொதுச் செயலாளர் வீட்டில் நடத்துள்ள திருட்டுச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.