புதுச்சேரி அமைச்சர்களிடம் கோப்புகள் ஒரு வருடத்திற்கு மேலாக தங்குகிறது: கிரண்பேடி புகார்
By DIN | Published On : 10th January 2020 10:17 AM | Last Updated : 10th January 2020 10:17 AM | அ+அ அ- |

புதுச்சேரி: புதுச்சேரி அமைச்சர்களிடம் கோப்புகள் ஒரு வருடத்திற்கு மேலாக தங்குகிறது என்று புகார் தெரிவித்துள்ள துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, தொழில்நுட்ப மென்பொருட்களை சிறந்த முறையில் பயன்படுத்தாமல் ஒரு நகரம் ஸ்மார்ட் நகரமாகாது என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள பதிவில், ஊழல் இல்லாத எதிர்காலத்திற்கான புதுச்சேரியை தயார் செய்ய வேண்டும், அரசு திட்டங்களை பெற மக்கள் அலை கழிக்க கூடாது. அரசு கோப்புகளின் நகர்வில் தாமதம் கூடாது.
சில அமைச்சர்களிடமிருந்து ஒரு வருடத்திற்கும் மேலாக வைத்திருக்கும் கோப்புகளைப் ஆளுநர் மாளிகை பெறுகிறது. அமைச்சர்களிடம் தங்கும் கோப்புகளைத் திரும்பப் பெற அரசு செயலர்கள் தயங்குகிறார்கள்.
புதிய தொழில்நுட்பம் மூலம் ஒவ்வொரு கோப்பின் இயக்கத்தையும் வெளிப்படையானதாக மாற்ற தேசிய தகவல் தொழில்நுட்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், கிடைக்கக்கூடிய தொழில்நுட்ப மென்பொருட்களை சிறந்த முறையில் பயன்படுத்தாமல் ஒரு நகரம் ஸ்மார்ட் நகரமாகாது என கிரண்பேடி தெரிவித்துள்ளார்.