நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தை பார்வையிட அருப்புக்கோட்டை மாணவி தேர்வு
By DIN | Published On : 10th January 2020 09:56 AM | Last Updated : 10th January 2020 09:56 AM | அ+அ அ- |

விருதுநகர் : அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் நடத்திய சிறப்புத் தேர்வில் வெற்றி பெற்றதன் மூலம் விண்வெளி ஆராய்ச்சி மையத்தை பார்வையிடும் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 11 வகுப்பு மாணவி லட்சுமிபிரியா தேர்வாகியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தெற்குத் தெரு பகுதியில் வசிப்பவர் சதீஷ்குமார்-தீபா தம்பதியினர்.
இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.அவர்களில் மூத்த மகளான லட்சுமிபிரியா என்பவர் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். உயிரியில் கணிதப் பாடப் பிரிவில் படிக்கும் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க விண்வெளி வீரர் டான் தாமஸ் பள்ளிகளில் கலந்து கொண்டநிகழ்ச்சியினை நேரில் பார்த்தபிறகு நாசா விண்வெளி மையத்திற்கு செல்ல உரிய தேர்வினை இணையதளம் மூலம் ஆர்வமுடன் எழுதியுள்ளார்.
இதில் வெற்றி பெற்ற மாணவி லட்சுமி பிரியா நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சென்று பார்வையிட்டு வர தேர்வாகியுள்ளார்.
மாணவி லட்சுமி பிரியாவுக்கு பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் உறவினர்களும், நண்பர்களும் வாழ்த்துத் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G